உதவி செய்யவிடாமல் தடுக்கும் திமுக எம்.எல்.ஏ: அதிமுகவினர் புகார்

0
473

அதிமுகவினரை நலதிட்ட உதவிகளை செய்யவிடாமல் தடுப்பதாக தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் தி.மு.கவினர் மீது வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் S.R.K அப்பு தலைமையிலான அதிமுகவினர் வேலூர் எஸ்பி செல்வகுமாரிடம் புகார் மனு அளித்தனர்.

அதில், ‘கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் வேலூர் மாநகரை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறோம். இதனை திமுகவினர் தடுப்பதோடு சமூகவலைதளங்களில் அவதூறாக விமர்சித்து வருகின்றனர். தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினரை ஏவி விட்டு பொய்யான வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. ஆகவே வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயன் உட்பட தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here