தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா நாசரேத் பேரூராட்சி மணிநகர் 4ஆவது வார்டு பகுதியில் சர்ச் தெரு மற்றும் முனியசாமி கோவில் தெரு ஆகிய இரு தெருக்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அவர்கள் புழங்குகின்ற, நாசரேத் மெயின் ரோட்டுக்கு செல்கின்ற சாலைகள் பராமரிப்பு செய்யப்படாமல் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. சமீபத்தில் மழை நீர் தேங்கி 10 நாட்களாக நின்றது.
சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தட்டு தடுமாறிகீழே விழுந்து காயம் ஏற்படுகிறது நாசரேத் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் வருந்துகின்றனர். மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் எடுத்து சாலைகளை அமைத்து தருமாறு வேண்டுகின்றனர்.









