கடல் அரிப்பில் சரிந்த கோயில் கடலுக்குள் படகுகள் – உவரி அருகே துயரம்

0
1024

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனையில் கடந்த இரு நாட்களாக கடல் அரிப்பு மிகவும் மோசமாக இருந்தது. இதில், மிக்கேல் அதிதூதர் குருசடி கோயில் அஸ்திவாரம் வரை மணல் சரிந்து கோயில் விழுந்து விடும் நிலையில் உள்ளது.

3 வல்லங்கள் ( படகுகள்) மற்றும் வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. வலை உலர்த்தும் கூடங்கள் சாய்ந்துள்ளன.இதனால் வேதனை அடைந்த மக்கள் அரசியல் தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் முறையிட்டனர். மக்கள் வளர்ச்சி சங்கம் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டது.

இதை அடுத்து, தமிழ்நாட்டு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, திசையன்விளை தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் இன்று கடல் அரிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

முதற்கட்டமாக, மணல் மூட்டைகள் மூலம் சரிந்த கோயில் அஸ்திவாரத்துக்கு முட்டு கொடுக்க, தொடர்ந்து மற்ற சேதங்களை சரி செய்ய முடிவெடுக்கப்பட்டது . சபாநாயகர் அப்பாவுவிடம் தூண்டில் வளைவு அமைப்பதற்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர். விரைவில் அதற்கான ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here