புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் தனிப்படை காவலர் சாமிகண்ணு ஆகியோர் இன்று காலை தட்டப்பாறை விலக்கில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்று வந்தது. தண்ணீர் வழியவழிய தாமிரபரணி மண்ணுடன் வந்த லாரியை மடக்கி பிடித்த இன்ஸ்பெக்டர், லாரியை ஓட்டி வந்த நாட்டார் குளம் முத்துசாமி மகன் மாரியப்பனி டம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.
அதில், தாமிரபரணியில் மண்ணை அள்ளி, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த தாசில்தார் ஒருவர் வீட்டுக்கு சீதனமாக கொண்டு செல்வதாக சூதானமாக சொன்னார் மாரியப்பன். அவரை கைது செய்து,லாரியை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.