பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
அதில் பணிபுரியும் ஆசிரியர்களில் இருவர் ஏழாம் படிக்கும் மாணவர்கள் இருவரிடம் மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவர்கள் பெற்றோரிடம் முறையிட, இன்று காலை பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்கள் புகார் கூறினர். ஆனால், தலைமை ஆசிரியர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், அவர்களை சமாளிக்கும் விதத்தில் இரு ஆசிரியர்களையும் சில நாட்கள் விடுப்பு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். பள்ளி அலுவலக ஊழியர் ஒருவர் ஆசிரியர்கள் மீது புகார் தெரிவித்து எழுதிக் கொடுக்கக் கூடாது என்று மாணவர்களை மிரட்டியுள்ளார்.
மாணவர்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிப்பதோடு, ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளை அரசும் கல்வித்துறையும் வலியுறுத்தும் நிலையில், ஆசிரியர்களின் குற்றத்தை மூடி மறைக்கும் மூடாங்கு வேலை நடந்துள்ளது.
ஏற்கனவே, இந்த பள்ளியில் போதைப் பழக்கமும் சாதி முரண்பாடும் காணப்பட்டது. அதற்கான கவுன்சிலிங் உள்ளிட்ட ஏற்பாடுகள்செய்யப்படவில்லை. மாறாக, கடந்த 3 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை மாற்று சான்றிதழ் கொடுத்து வெளியில் அனுப்பியுள்ளனர்.
மாணவர்களை வெளியில் அனுப்பியதற்கு பதிலாக, சாதி, போதை பழக்கம் உள்ள ஆசிரியர்களை நிர்வாகம் வெளியேற்றினால் மாணவர்கள் திருந்திவிடுவார்கள் என்று சக ஆசிரியர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.










