போலி ஆவணம் பெற்று கடன் கொடுத்த கனரா வங்கி மேனேஜருக்கு 3 ஆண்டு சிறை

0
847

கோவை கவுண்டம்பாளையத்தில் சேர்ந்தவர் குமரன் (48). மாருதி பில்டர்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். பல்வேறு நபர்களின் பெயரில் மொத்தமாக வீடு கட்டி கொடுப்பதற்கு கடன் வழங்க கோரி கவுண்டம்பாளையம் கனரா வங்கி கிளை மேலாளர் சண்முகம் என்பவரை சந்தித்தார். தங்கநகை தொழிலாளிகள் இ எஸ் ஐ நிறுவன பணியாளர்கள் என பல்வேறு நபர்களின் பெயரில் சம்பளப்பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களை குமரன் சமர்ப்பித்தார். வங்கி மேலாளர் சண்முகம் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த குமரன் பெயரில் மொத்தமாக 13 கோடி ரூபாய் கடன் வழங்கினார் .கடந்த 2001 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்த கடன் வழங்கப்பட்டது.

ஆனால் கடன் பெற்று நீண்ட நாட்களாகியும் தவணைத் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை. இதையடுத்து வங்கி உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த போது போலி சம்பளப் பட்டியல் மற்றும் போலியான வீட்டுமனை ஆவணங்களை கொடுத்து கடன் பெற்று மோசடி செய்ததும் இதற்கு வங்கி மேலாளர் சண்முகம் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக வங்கி மேலாளர்  சண்முகம் (65), குமரன் (48), கெம்பட்டி காலனியை  சேர்ந்த ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் சித்திரைக்கனி(57) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .இவர்கள் மீது கடந்த 2009ஆம் ஆண்டு சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கோவிந்தராஜன் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here