பிரசித்தி பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆலயத்திலிருந்து முக்கிய வீதி வழியாக ஆரோக்கிய மாதா உருவம் பதித்த கொடி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் ஆலய வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சிறப்பு திருப்பலிக்கு பின்பு ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் 75 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றி விழாவை தொடங்கிவைத்தார்.
இந்த பெருவிழா செப்டம்பர் 8ஆம்தேதி வரை நடக்கிறது. 7ஆம் தேதி பெரிய தேர் பவனி நடக்கிறது.














