ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிரிலா திருப்பதி ( 27). கோவை துடியலூர் அடுத்த கோவில் மேடு மஞ்சேஸ்வரிநகரில் மனைவியுடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார்.
இவர் கொரோனாவால் பாதிக்கபட்டுகடந்த 15 நாட்களாக வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று விஷம் குடித்தார் .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்காமல் நேற்று இரவ இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சிரிலா ஹேமலதா துடியலூர் காவல் நிலையத்தில புகார் செய்து உள்ளார். இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்.














