மதுரை அருகே வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி

0
1085

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வண்ணாம்பாறைபட்டியில் இருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மீது, எதிரே வந்த மகேந்திரா சீட் வேன் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற வண்ணாம்பாறைப்பட்டியைச் சேர்ந்த பிரபு (32), மற்றும் அவரது நண்பர் கணேசன் (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற் கூராய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்,

மேலும் இந்த விபத்துக் குறித்து , கீழவளவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here