சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தராக பதவி வகித்து வந்த ராஜேந்திரனின் பதவிக்காலம் கடந்த 4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து பல்கலை கழகத்தின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள துணைவேந்தர் பொறுப்புக்குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது
இக்குழுவின் தலைவராக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயனும், உறுப்பினர்களாக அழகப்பா பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுவாமிநாதன், குருமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு பல்கலை துணைவேந்தரின் பணிகளை புதிய துணைவேந்தர் பதவியேற்கும் வரையில் மேற்கொள்வார்கள் என பதிவாளர் (பொ) சேகர் தெரிவித்துள்ளார்.














