ராஞ்சியில் உள்ள ஹாடியாவுக்கும் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்துக்கும் இடையே ஓடும் ரயில் ‘ஹாதியா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்’. இதை மலையாளத்தில் மொழிபெயர்த்து பெயர்ப்பலகை வைத்திருந்ததை பார்த்த ஒருவர் ‘ஷாக்’ ஆனார். அதில், “கோலபதகம்” (கொலைகாரன்) – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் என்றிருந்தது.
இந்தப் பெயர்ப்பலகையைப் படம் பிடித்து சமூக ஊடகங்களில் சிலர் பரப்பத் தொடங்கினர். இதையடுத்து, “கொலை” என்று பொருள்படும் “ஹத்யா” என்ற ஹிந்தி வார்த்தையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த தவறு நடந்ததாகத் தெரிவித்த ரயில்வே அதிகாரிகள், துரித நடவடிக்கை எடுத்து மலையாள வார்த்தைக்கு மஞ்சள் பூசினர்.













