கூட்டணி என்றால் கூட்டுக் கொள்ளை

0
482

பாஜகவின் ‘பி’ டீம் நா. த.க…. இல்லை அதிமுக… வேறெது, தி.மு.க.வே தான் …’ என்றெல்லாம் இங்கு ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கும் வேளையில், ‘ பாஜகவின் ‘பி’ டீம் காங்கிரஸ்’ என்ற உண்மையை போட்டுடைத்துள்ளார் கேரள காம்ரேட் ‘ பினராயி விஜயன் ‘.

அது உண்மைதான். காங்கிரஸிலிருந்து வந்தவர்களால் தான் இந்துத்துவ அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. பாபர் மசூதியை இடிப்பதற்கு ஏதுவாக அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டது நரசிம்மராவ் காலத்தில்தான். ராமர் கோயில் கட்டுவதற்கு வந்த தீர்ப்பை முதல் ஆளாக வரவேற்றவர் ராகுல்தான்.

நீட் ‘ கொண்டு வந்தது, மின் மசோதா வை அறிமுகப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை காங்கிரஸ்தான் செய்தது.

இந்தி திணிப்பு, சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி, பி எம் ஸ்ரீ பள்ளி போல் நவோதயா, எல்லாமே காங்கிரஸ் காலத்த
து ஏற்பாடு தான்.

இன்று,’ ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு வரலாறு என்று பாஜக கொண்டுவர முயல்கிறது காங்கிரசோ, பல இனங்கள், பல மொழிகள், பல வரலாறு, கலாச்சாரம் என்ற கொள்கை உடையது’ என்று ராகுல் கூறினாலும், இந்திய ஏகாதிபத்திய உணர்வை முதலில் உருவாக்கியது காங்கிரஸ்தான்.

எனவே, காங்கிரஸ் பாஜகவின் பி டீம் என்பது அச்சடித்த உண்மை.

ஆனால் ஒன்று. பாஜகவின் கொள்கைக்காக அதை எதிர்ப்பதாகக் கூறும் கம்யூனிஸ்டுகள், அதே கொள்கைகளைக் கொண்ட காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது என்ன நியாயம்? அயோக்கியர்களாக கருதுபவர்களை அரவணைப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனம் அல்லவா?

பாஜக, காங்கிரஸ் பாசிச கொள்கைகளுக்கு மாறாக பேசும் கம்யூனிஸ்டுகள், அதை கடுமையாக எதிர்க்காமல் இருப்பது அரசியல் தந்திரமா?

‘பாஜகவின் பி டீம் காங்கிரஸ் எனக் கூறும் பினராயி விஜயன் போன்றவர்கள், அக்கட்சியோடு ஒரு மாநிலத்தில் இணங்கியும் மறு மாநிலத்தில் எதிர்த்தும் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதை எப்படி நியாயப்படுத்துவார்கள்?’ என பொதுமக்கள் கேட்கிறார்கள்.

உண்மையிலேயே, கொள்கை இருந்தால், கோட்பாடு இருந்தால், தெம்பு இருந்தால் திராணி இருந்தால், முற்போக்கு முகமூடி போட்டுக் கொள்ளும் கட்சிகள், பிற்போக்கு அமைப்புகளோடு கூட்டணி வைக்கக் கூடாது. தங்கள் கொள்கைகள், செயல்பாடுகள் மூலம் தனித்து இயங்க வேண்டும். போராட்டங்கள் மூலம் மக்களை கவர வேண்டும். காங்கிரஸ் திமுக போன்ற கூட்டணி கட்சிகளின் உதவியை நாடாமல், மக்களிடம் நன்கொடை பெற்று கட்சி வளர்க்க வேண்டும், தேர்தலில் போட்டியிட வேண்டும்.

இல்லையேல், ‘கூட்டணி என்பது கூட்டுக் கொள்ளைக்காகத்தான் ‘ என்ற உண்மையை வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here