மதுரையில் 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – 2ரைஸ்மில்லுக்கு சீல்

0
883

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணி அய்யனார்புரம் தனியாருக்கு சொந்தமான மற்றும் அரிசி ஆலை, கல்லம்பல் பகுதியில் உள்ளது.

இந்த அரிசி ஆலையில், சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக, மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், வருவாய்த்துறையினர் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் கொண்ட தனிப்படை அங்கு சென்றபோது, அரிசி ஆலையில் இருந்தவர்கள் தலை மறைவானதுடன் , அந்த ஆலையை
பூட்டி, சீல் வைத்தனர்.


பனையூர் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் ,பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு இடங்களிலும் 20 டன் ரேஷன் அரிசியை, மாவு அறைப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனடிப்படையில், 20 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர்,
அரிசி ஆலையை
பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து தலைமறைவான, உரிமையாளர் போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here