19.4. 2018 ல் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் விதமாக பதிவிட்டதாக நடிகர் எஸ்வி சேகர் மீது வழக்கு தொடரப்பட்டது.
நெல்லை, சென்னை போன்ற இடங்களில் இருந்து அவர் மீது பத்திரிகையாளர்கள் தொடுத்த வழக்கு அனைத்தையும் சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்எல்ஏ எம்பிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து 17.11.2023ல் நடந்த விசாரணையின் போது நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வழக்கு தொடர்ந்த அய்கோ என்ற அய் கோபால்சாமி , மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகர் எஸ்வி சேகர் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பு ஆஜராகினர்.
அரசு தரப்பில் வக்கீல் வாஷிங்டன், நடிகர் எஸ்வி சேகர் தரப்பில் வெங்கடேஷ் மகாதேவன் , பத்திரிகையாளர் அய்கோ சார்பில் வழக்கறிஞர்கள் சரவணவேல், அஜிதா அணி சாரல் ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.
அப்போது பெண் பத்திரிகையாளர்களை பற்றி தான் பகிர்ந்த பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ் வி சேகர் நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ததால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 320ன் படி தீர்ப்பளிக்குமாறு அய்கோ நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார் .
இதையடுத்து வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதி ஜெயவேல் தீர்ப்பளித்தார்.











