தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர்.
இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் , சமயதுரை உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ஜெயராஜின் மனைவியும் பென்னிக்சின் தாயாருமான செல்வராணி நீதிபதி முன்பாக 1மணி சாட்சியம் அளித்த நிலையில் அடுத்து சாட்சியத்திடம் குறுக்குவிசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்வராணி, ’எனது கணவர் மற்றும் மகன் கடைக்கு சென்றபோதுஉடல்நலத்துடன் இருந்தனர். மீண்டும் இறந்த நிலையிலையே அவர்களை பார்த்தேன். என் கணவர் ஜெயராஜை சிறைக்கு அழைத்துசென்றபோது, ‘ நடந்தது நடந்து விட்டது நீ உனது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிடு’ என கடைசியாக பேசினார்.
இப்போது நீதிமன்றம் மூலமாக விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம்’ என தெரிவித்தார்.









