தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் செயற்குழு மற்றும் ஆலோசனை குழு கூட்டங்கள் பொதுச் செயலாளர் பத்திரிகையாளர் அய்கோ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று ஆற்றுக்குள் மலம் கழிப்பது, வாகனம் கழுவுவதை தடை செய்து மாநகராட்சி வைத்துள்ள விளம்பரப் பலகைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, மாசுபடுத்துவோரை கண்காணித்து அபராதம் விதிக்க வலியுறுத்தப்பட்டது.
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி பொறுப்பற்ற முறையில் ஆற்றுக்குள் மேலப்பாளையம், மேலநத்தம் பகுதி கழிவு நீரை திறந்துவிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், உடந்தையான மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காவிட்டால், இரு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்த பூ மங்கலம் பகுதியில் இயக்கத்தால் தூய்மைப்படுத்தப்பட்ட 2.5 கி. மீ. ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடவும் பனை விதைகள் விதைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில், அருட்தந்தையர் பிரான்சிஸ் சேவியர், மைபா, ஏரல் ஜெயபாலன், வழக்கறிஞர் சுதர்சன், சாந்தா, சிலுவை பிரகாசம், பால் அண்ணாதுரை, டேனியல், அருள்ராஜ், பொன் ராணி, சுசிலா, அந்தோணி ராஜா சிங், சமுத்திரவல்லி, பொன்சேகர், ராபின், கணபதி முக்தார், செந்தில் வேலன், செல்வக்குமார், ஐசக், வர்கீஸ், மகேஸ்வரி புனித செல்வி, செல்வி, முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.