தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தும் பணி நடக்கிறது. இந்த திட்டத்துக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர்களை அந்தந்த மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மூலம் மாவட்ட நிர்வாகம் பணியமர்த்துகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 12 வட்டாரங்களுக்கு 23 ஒருங்கிணைப்பாளர்களை ரூ.12 ஆயிரம் மாத ஊதியத்தில் பணியமர்த்த தேர்வு நடந்தது. ஆனால், விதிமுறைப்படி விளம்பரம் செய்து தேர்வு நடத்தப்படவில்லை. அதற்குள் இன்று நேர்முகத்துக்கு வேறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நமது இணைய இதழ் சார்பில் செய்தி வெளியிட்டு, முறையாக தேர்வு நடத்துமாறு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து இன்று நடக்கவிருந்த நேர்முகம் நிறுத்தப்பட்டது. உயர் அதிகாரிகளுடன் கலந்துபேசி முறையாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தவிருப்பதாக மகளிர் திட்ட வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.














