தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் கடந்த மாதம் 27ஆம் தேதி நெல்லை மாநகராட்சி பகுதியில் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி மாநகராட்சி அலுவலகத்தை கழிவுநீர் கலந்த குடிநீர் பாட்டில்களுடன் முற்றுகையிட்டனர்.
இதை மெய்ப்பிக்கும் வகையில் பாளை.மண்டல 9ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சுப்புலட்சுமி தனது வார்டில் தெருக்களில் வீடுகளில் கழிவுநீர் கலந்தே குடிநீர் வருவதாகவும் அதை தடுக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லையென்றும் கூறினார்.
இதை ஒத்துக்கொண்ட பாளை.மண்டல உதவி ஆணையர் பூமிக்கு அடியில் குடிநீர் குழாயில் எந்த இடத்தில் கழிவுநீர் கலக்கிறது என்று ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
தாமிரபரணி மாசு நதி மூலம்,ரிஷி மூலத்தை தாண்டி விட்டது.