தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் (56 ). இவர் இன்று பகல் கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டியது.
வைத்து அரிவாளால் வெட்டப்பட்டா.படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மணல் கொள்ளை தொடர்பான விவகாரத்தில் விஏஓ வெட்டிக் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். மாரிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் பார்வையிட்டார். சமீப காலமாக நெல்லை, தூத்துக்குடியில் மணல் கொள்ளை மீண்டும் பெரிய அளவில் நடந்து வருகிறது.
காவல், வருவாய்த் துறையினரின் கூட்டுக் கொள்ளையை காட்டிக் கொடுக்க முயலும் அலுவலர்கள் மணல் மாஃபியாக்களின் கொலைவெறிக்கு ஆளாகின்றனர்.