அரியலூர் மாவட்டம் மருதூர் ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக பணிபுரியும் அன்பழகன் அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில், அவர் அளித்த 10ஆம் வகுப்பு சான்றிதழ் போலியானது என தெரியவந்துள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வு பெற்றதாக கையால் எழுதிய சான்றிதழை கொடுத்து அவர் வேலையில் சேர்ந்திருந்தார். கல்வித்துறை ஆய்வில் அது போலி என தெரியவந்ததையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.