ஒரு ரூபாய்க்கு துணி விற்பனை… ஐந்தே நிமிடத்தில் கடையை காலி செய்த பெண்கள்

0
709

ரஷ்யாவின் விளாடிகவ்கஸ் என்ற இடத்தில் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் என்ற விலையில் துணிகள் விற்கப்படும் என ஸ்டோலிஸ்டா என்ற கடை நிர்வாகம் அறிவித்தது. அறிவிப்புப் பலகையைக் கண்டதும், பெண்கள் கூட்டம் கடையின் முன் வரிசை கட்டிக் குவிந்தது. கடை திறந்த மறுவினாடியே கடைக்குள் நுழைந்த பெண்கள், கடையில் வைக்கப்பட்டிருந்த துணிகளை அள்ளிக் கொண்டனர்.

ஒரே துணிக்கும், பிறர் கையில் வைத்திருக்கும் துணியைப் பறிக்கவும் நடந்த போட்டியில் ஒருவரை ஒருவர் தள்ளி தாக்கிக் கொண்டனர். கடை திறக்கப்பட்ட ஐந்தே நிமிடங்களில் கடையில் இருந்த அனைத்து துணிகளும் விற்றுத் தீர்ந்தன. மீண்டும் இதே போன்றதொரு சலுகையை விரைவில் அறிவிக்க இருப்பதாக அந்த கடை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த வீடியோவைக் கண்டவர்கள் துணிக்காக, மானத்தைக் காற்றில் பறக்க வைத்து விட்டதாகவும், இதுதான் அவர்கள் கற்றுக் கொண்ட ஒழுக்கமா? என்றும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here