கொடைக்கான‌ல் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளுக்கு கொரோனா ப‌ரிசோத‌னை தீவிர‌ம்

0
1016

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது .இந்நிலையில் கூடுதல்  தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் அதிக‌ரித்து அணிவகுத்து வருகின்றனர் ..தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகையால் முக்கிய பிரதான சாலைகள் அனைத்தும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது .

மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் கூடும் இடங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையும் கட்டாயமாக்க பட்டுள்ளது .இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் மருத்துவத் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் விதிமுறைகளை மீறும் சுற்றுலாப் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here