நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டி படுகொலை

0
4651

நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டவர் மாயாண்டி என்பதும் நெல்லை அருகே கீழ நத்தத்தில் நடந்த படுகொலைக்கு பழிக்கு பழியாக கொலை நடத்தப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது.

இன்று காலை இந்த சம்பவத்தை நிகழ்த்திய 4 பேர் கொண்ட கும்பல்
காரில் ஏறி தப்பி ஓட்டம் பிடித்துள்ளது. சோதனைச் சாவடிகளில் அவர்களை மடக்க போலீசார் தீவிர முயற்சி செய்கின்றனர்.

பலத்த காவல் போடப்பட்ட நீதிமன்றத்திற்கு எதிரேயே படுகொலை நடத்தப் பட்டதால் வக்கீல்கள் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here