தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி மாதத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சியில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சுறுசுறுப்பு அடைந்து பணிகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு எண் 53 பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமுதற்கட்டமாக மசக்காளிபாளையம் சாலை முழுவதும் உள்ள சுவர்களில் நமது சின்னம் கதிர் அரிவாள் என்று எழுதப்பட்டு வருகிறது.
இந்த வார்டு திமுகவிற்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதால் கூட்டணி கட்சியினர் சுவரில் வரைந்த சின்னங்களை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
மேலும் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இந்த செயல்பாடு திமுக கூட்டணி கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.