கருவூலத்துறை சர்வர் கோளாறு: அகவலைப்படிக்கு அல்லாடும் ஆசிரியர்,அரசு ஊழியர்

0
436

கடந்த 4 ஆண்டுகளாக அமப்படுத்தப்பட்ட நாளிலிருந்து பல்வேறு குறைபாடுகளோடு இயங்கிக் கொண்டிருக்கும் கருவூலத்துறையின் சர்வர் (FHRMS ) இந்நாள் வரை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடக்க நிலையில் இருந்தது போலவே இருக்கிறது.

இதனால் 16 லட்சம் அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வூதியர்கள் ஊதியம், நிலுவை, வருங்கால வைப்புநிதி முன்பணம்,பண்டிகை முன்பணம், போக்குவரத்து படி உள்ளிட்ட பல்வேறு பண பலன்கள் பெறுவதில் ஒவ்வொரு மாதமும் துயரமும் அடைந்து வருகின்றனர்.

கடந்த பத்து நாட்களாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைப்பட்டி தயாரிக்க பல்வேறு முயற்சி செய்தும் இன்னும் பகுதி ஊழியர்களுக்கு பெற்று வழங்கப்படவில்லை. இதற்கு முழு காரணமும் IFHRMS சர்வர் மட்டுமே. இதை மேம்படுத்த அரசிடமோ விப்ரோ கம்பெனியிடமோ எந்தவித முயற்சியும் இல்லை என அலுவலர்கள் அங்கலாய்கின்றனர்

சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு (AI) உலக அளவில் வந்துவிட்ட நிலையிலும் தமிழக அரசுக்கு தயாரித்துக் கொடுத்த IFHRMS சர்வர் உலகிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மோசத்திலும் மோசமாக உள்ளது.

எனவே, போர்க்கால அடிப்படையில் சர்வரை மேம்படுத்தி முறையாக அலுவலக நேரத்தில் இயங்கும் படியாக உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here