துபையில் இருந்து மதுரைக்கு வரும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா வான்வெளி நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்ததது.
இதனையடுத்து ,சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் –
ஒரு பெண் பயணியிடம் சோதனை செய்ததில் பச்சை கலரில் களிமண்ணால் மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள பொருள் கைப்பற்றப்பட்டது. அதை சோதனை செய்ததில் 813கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு நாற்பத்தி மூன்று லட்சத்து 24 ஆயிரத்து 524ரூபாய் ஆகும்.
இதில் தொடர்பாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்..













