நவராத்ரி விழாவையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இக் கோயிலில் நவராத்ரி விழாவானது இன்று தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினசரி மாலை நேரங்களில், அம்மன் , பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளிப்பார்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்
கிழமைகளில் , பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது .

இதேபோல, மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், பிரளயநாத சிவன், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர், மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரர், சித்திவிநாயகர் ஆலயங்களிலும், நவராத்ரியையொட்டி, அம்மன், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.














