நாமக்கல், முத்துகாப்பட்டி-பழைய பாளையம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சுப்ரமணியின் மகன் தீபக் (வயது 19) தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ராணிக்ஸ் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற தீபக் இரவு வெகு நேரமான பிறகும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை நாமக்கல்- மோகனூர் ரெயில்வே தண்டவாளத்தில் தீபக் பிணமாக கிடந்தார். அவரது தலை மட்டும் தனியாக துண்டாகி இருந்தது. அந்த வழியாக சென்ற மக்கள், இது குறித்து நாமக்கல் போலீசாருக்கும், சேலம் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீபக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீபக் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.