சற்று முன்பு: நெல்லை ஹைகிரவுண்ட் அருகே நர்ஸ் கொன்று எரிப்பு

0
2134

பாளை. ஹை கிரவுண்ட் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்தவர் அய்யம்மாள் (45). இன்று இரவு 7 மணி அளவில் டூட்டியை முடித்துவிட்டு ஹை கிரவுண்டை அடுத்த அண்ணா நகர் அருகே வந்தபோது அவரது கணவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும், அங்கேயே அவரை பெட்ரோல் ஊற்றி எரித்தார்.

கோவில்பட்டியைச் சேர்ந்த அய்யம்மாளுக்கு பாலசுப்பிரமணியன் என்ற அப்துல் காதருடன் திருமணம் ஆகி 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தகராறு காரணமாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்துள்ள நிலையில் தான் பணிக்கு சென்று வந்த மனைவியை வழிமறித்து தகராறு செய்து அங்கேயே குத்திக் கொன்றுள்ளார் கணவர்.

மனைவியை கொன்றவர் ,கோவில்பட்டி போலீசில் சென்று சரண் அடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here