தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்து நகர் பகுதியை சேர்ந்த சண்முக கனி (72) என்பவர் அங்கு தீப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அங்கு 50 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை பொருட்கள் திருடு போனது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அதே பகுதியை சேர்ந்த சங்கர் (40) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.







