அமெரிக்காவிலிருந்து திரும்பினார் ரஜினி

0
1015

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, அவ்வப்போது ரஜினிகாந்த் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த 19 ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய அரசின் அனுமதியோடு ரஜனிகாந்த் அமெரிக்கா சென்றிருந்தார்.

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் சில நாட்கள் ஓய்வெடுத்த ரஜினிகாந்த் இன்று அதிகாலை 3 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

சென்னை விமானத்தில் வந்த ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் தலைவா வாழ்க என கோஷமிட்டு வரவேற்றனர். அப்போது மருத்துவ பரிசோதனை நல்லப்படியாக முடிந்தது என தகவல் தெரிவித்த ரஜினி பின் அங்கிருந்து இல்லம் புறப்பட்டு சென்றார்.

மேலும் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால், அப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் ரஜினி விரைவில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here