தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூர் கிராமப் பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இதுகுறித்து அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவி திருக்கல்யாணி தலைமையிலான உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.









