ராமநாதபுரத்தில் நாளை முதல் 144

0
1445

இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்கம் குருபூஜை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்., 8) நள்ளிரவு முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அக். 25 முதல் 31-ம் தேதி வரையிலான நாட்களில் பிற மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது கலவரத்தின் அவசர நிலைகளில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144 தடை உத்தரவு அமலாக்கப்படுகிறது. பிரிவு 144 நடைமுறைப்படுப்பட்ட பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் கூடுவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here