முதல்வர் வீட்டு முன்பு தென்காசி வாலிபர் தீக்குளிப்பு

0
441

தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டு முன்பு இன்று ஒருவர் மண்ணெண்ணெய் மேலே ஊற்றி தீக்குளிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

தீக்காயம் ஏற்பட்டு காயமடைந்த அந்த நபரை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தீக்குளிப்பில் ஈடுபட்ட நபர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

தி.நகர் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

தேனாம்பேட்டை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here