ஹாலிவுட் மெகா ஸ்டார் பிராட் பிட் விரைவில் வெளிவரவிருக்கும் விண்வெளி திரைப்படமான ஆட் அஸ்ட்ரா விளம்பரத்துக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் உரையாடினார்.
சர்வதேச விண்வெளியில் உள்ள வாழ்க்கையைப் பற்றி பேசி ய பின்னர் ‘விக்ரம் லேண்டர் தரையிறங்கியதை நீங்கள் இருந்த இடத்திலிருந்து காண முடிந்ததா?’ என்று விசாரித்தார்.
இதற்கு பதிலளித்த ஹேக் ‘இல்லை, துரதிர்ஷ்டவசமாக, நானும் மற்ற குழுவினரும் செய்தி அறிக்கைகளைதான் பார்க்க வேண்டியிருந்தது’ என்று பதிலளித்தார். இந்த உரையாடல் நாசா டிவியில் ஒளிபரப்பப்பட்டது.














