மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஞாயிற்றுக்
கிழமைக்கு பதிலாக, திங்கள்கிழமை நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தைத் திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் 14, 15, 16, ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 150 பார்வையாளர்கள், குறிப்பிட்ட மாடுபிடி வீரர்கள் என பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , தற்போது தமிழக அரசு வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவித்துள்ளது .
எனவே ,அன்று நடைபெறுவதாக இருந்த உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதற்கு அடுத்த நாளான 17-ஆம் தேதி நடைபெறும்.
எனவே, அந்த நாளில் அரசின் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடைபெறும். மேலும் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய மூன்று நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக பங்கேற்க வரும் மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் பதிவு நடைபெறுகிறது. இதற்காக பதிவு இன்று மாலை 3 மணிக்கு துவங்கி நாளை மாலை 5 மணி வரை நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.