ஊழியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து மதுரை மாநகராட்சி முற்றுகை

0
820


மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு தொழிற்சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு கூடி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

500க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு ஒப்பந்த பணியாளர்கள், தெருவிளக்கு பணியாளர்கள், கழிவு நீர் ஊற்றும் பணியாளர்கள், பாதாளச் சாக்கடைப் பணியாளர்கள், தொழில் நுட்ப உதவியாளர்களை திடீரென மதுரை மாநகராட்சி நிர்வாகம் பணிநீக்கம் செய்ததாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது .

தொழிலாளர்களை அனைவரையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது உட்பட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here