மதுரை மாநகராட்சி 36ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த எம்.ஷாஜகானுக்கு கட்சியில் சீட் வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஷாஜகான் அந்த வார்டில் சுயேச்சையாக தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவர் அன்புஅன்பு நகர், அம்பிகை நகர், தலைவிதி போன்ற குடியிருப்போர் நலச் சங்கங்களின் செயலாளராக உள்ளார். 32 ஆண்டுகளாக கட்சி பணியாற்றிய இவருக்கு திமுகவில் கவுன்சிலர் சீட்டு மறுக்கப்பட்டுள்ளது.
குடியிருப்போர் நலச் சங்கங்களின் செயலாளராக இருப்பதால் இவருக்கு மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது.இது திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திகேயனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.