பூட்டிய வீடுகளை குறிவைத்து திருடிய சகோதரர்கள் கைது -110 பவுன் நகை மீட்பு

0
490

மதுரை மாவட்டம் புறநகர் பகுதிகளான அலங்காநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை, கீழமாத்தூர், திருமங்கலம் போன்ற பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறிவைத்து தொடர்ச்சியாக நகை பணம் திருட்டு போனதாக காவல்நிலையங்களில் புகார்கள் குவிந்தது
திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வந்தனர்

இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டதாக மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்த மகேந்திரன், நாகேந்திரன் என்ற அண்ணன் தம்பியை போலீசார் கைது செய்தனர்

அவர்களிடமிருந்து 110 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார்

அண்ணன் -தம்பி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கைது செய்யபட்ட சகோதரர்கள் மீது மதுரை-திண்டுக்கல் உள்ளிட்ட 10 மேற்பட்ட காவல் நிலையங்களில் கொலை,திருட்டு , வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here