குழந்தைகள் விற்பனை: காப்பக உரிமையாளர் உதவியாளருக்கு நீதிமன்ற காவல்

0
1176

மதுரையில் இதயம் அறக்கட்டளையின் கீழ் நடத்தப்பட்ட ஆதரவற்றோர் மையத்திலிருந்து கடந்த 29ஆம் தேதி இரு குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த புகாரில் 30ஆம் தேதி இரு குழந்தைகளும் மீட்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடைய இதயம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கலைவாணி முகவர்கள் செல்வி, ராஜா மற்றும் தம்பதியினர் உள்ளிட்ட 7பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் முதன்மையான குற்றவாளிகளான தலைமறைவாகியிருந்த அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார் மற்றும் உதவியாளர் மாதர்ஷா ஆகிய இருவரும் கடந்த 29ஆம் தேதி முதல் தலைமறைவாகினர்.

இதனிடையே இருவரையும் தனிப்படை காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தேடிவந்த நிலையில் நேற்று தேனி மாவட்டம் போடி அருகே தமிழக எல்லை பகுதியில் கைது செய்தனர்.

இதனையடுத்து மதுரை கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்த இன்று காலை முதல் துணை ஆணையர் தங்கதுரை தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குழந்தைகளை விற்பனை செய்தது, அறக்கட்டளையில் நடைபெற்ற சட்டவிரோத செயல்கள் குறித்தும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து இருவரையும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வரும் ஜூலை 16 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கநீதிபதி ராஜலிங்கம் உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here