பாளை மனகாவலம்பிள்ளை நகர் அம்பேத்கர் காலனியில் பாதாள சாக்கடைக்கு செல்லும் குழாய் அடைத்து கழிவுநீர் தேங்கியது. அதில் மழை நீரும் கலந்து கொசு பரவியது. இதைக் கண்டித்து ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பாளை உதவி காவல் ஆணையர் பெரியசாமி, ஆய்வாளர் தில்லை நாகராஜன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டனர். மறியலால் சுமார் அரை மணி நேரம் திருச்செந்தூர், தூத்துக்குடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.