மதுரை எல்லீஸ் நகர் ஆர். சி .சர்ச் தெருவில் வசித்து வரும் நாகவேல் (33). இவருக்கும் சுதா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. நாகவேல் பெயிண்டிங் வேலை செய்துகொண்டு தனது மனைவி சுதா , அம்மா சாந்தி தம்பி தாஸ் ஆகியோருடன் குடியிருந்து வருகிறார்.
நேற்று இரவு நாகவேலிடம் அவரது மனைவி சுதா, தனியாக வீடு எடுத்து தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தார். அப்போது தகராறு ஏற்பட்டு, கோபம் அடைந்த நாகவேல் மனைவி சுதாவை கைகளால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் தானாகவே காவல் நிலையம் சென்று சரணடைந்தார் . சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ். எஸ். காலனி போலீசார் சுதாவை உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.