மோசடி சொத்தை ஏலம் விடாமல் டிமிக்கி கொடுத்த தாசில்தார் வீட்டில் ரெய்டு

0
323

மதுரை மாவட்டம், மோசடி வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை ஏலம் விடுவதை தாமதப்
படுத்த லஞ்சம் பெற்றதாக துணை வட்டாட்சியரின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்
துறையினர் சோதனை மேற்
கொண்டனர்.


கடந்த 2021-22-ம் ஆண்டில், நிதி மோசடி புகாரில் சிக்கிய தனியார் நிறுவன உரிமையாளர், மோசடி பணத்தில் வாங்கிய சொத்துக்களை, இருவருக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சொத்துக்களை ஏலம் விட நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், ஏலம் விடுவதை தாமதப்படுத்த அப்போதைய தலைமை வருவாய் அலுவலராக இருந்த தனபாண்டி என்பவர், சுமார் ஒன்றரை லட்சம் மேல் லஞ்சம் பெற்றதாக புகாரளிக்
கப்பட்டது.


அந்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், துணை தாசில்தார் தனபாண்டி வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதனால், அரசு அதிகாரி வீட்டில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here