மதுரை ஆதீன 293ஆவது மடாதிபதி பதவியேற்பு

0
357

மதுரை ஆதின மடத்தில் மறைந்த ஆதினகர்த்தர் அருணகிரிநாதரின் 500 கிலோ எடையுள்ள பளிங்கு சிலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன், காலமான மதுரை ஆதீனத்தின் 292ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதினத்திற்கு சொந்தமாக இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தற்போது, மறைந்த ஆதினத்தின் பளிங்கு சிலை மக்களின் அஞ்சலிக்காக மடத்தில் வைக்கப்பட்டது. இதனை, ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் பார்த்து செல்கின்றனர். இந் நிலையில் மதுரை புதிய ஆதீனமாக மதுரை ஆதினத்தில் 293ஆவது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here