வங்கி தனியார் மயத்தை கண்டித்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

0
703

நடந்துவரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கும் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதனடிப்படையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஆகிய இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்க படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு வங்கிகள் 26 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது, மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து 100 சதவிகித ஊழியர்கள் அதிகாரிகள் டிசம்பர் 16 மற்றும் 17, ஆகிய இரண்டு நாட்கள் அகில இந்திய வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தற்பொழுது போராட்டம் நடைபெறுகிறது.

கோவையை பொறுத்தவரை 500க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனால், பொதுமக்களின் தேவைகளான, செக் கிளியரன்ஸ், ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் பாதிப்படைந்துள்ளது.இந்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கோவையில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணப் பரிமாற்றம் பாதிக்கப்படும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கி முன்பு 500க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை மனுவாக்கி, ஊழியர்கள், அதிகாரிகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்களை பெற்று பிரதமருக்கு அனுப்பியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here