ஆர்.எஸ்.புரம் சித்தி விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் பொன்னுச்சாமி (95). இவர் தனது மனைவி பாக்கியலட்சுமியுடன் வசித்து வருகிறார் . இவரது மூன்றாவது மகன் சின்னராஜ் (58) திருமணமாகி, தனது மனைவியை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். சின்னராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் அடிக்கடி மது அருந்துவதற்கு பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.
நேற்று முன்தினம் தனது பெற்றோரிடம் மது அருந்த பணம் வாங்கிவிட்டு சென்று அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீடு திரும்பினார். நள்ளிரவில் மது அருந்த மீண்டும் பணம் வேண்டும் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார் . அவரது பெற்றோர் பணம் தர மறுத்துள்ளனர். இதையடுத்து சின்னராஜ் தந்தை பொன்னுசாமி பயன்படுத்தும் கைத்தடியை எடுத்து பெற்றோரை அடிக்கத் தொடங்கினார் . கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
தொடர்ந்து அடித்து உதைத்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. அருகில் உள்ளவர்கள் முதியவர் பொன்னுச்சாமியின் அலறல் சத்தம் கேட்டு வந்து அவரை மீட்டனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முதியவர் பொன்னுச்சாமியின் புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம் செய்த போலீசார் சின்ன ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.