மெகா கடத்தல்: 12.5 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

0
1168

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) பார்த்திபனுக்கு வந்த தகவலின் அடிப்படையில், வேலூர் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையில் உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று(மே. 30) நள்ளிரவு 1.30 மணி அளவில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வாணியம்பாடியில் இருந்து பள்ளிகொண்டா நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடக பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக கடத்தி கொண்டு சொல்லப்பட்ட 12 ஆயிரத்து 650 கிலோ(12 டன்) எடையிலான 253 மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அரிசியை பறிமுதல் செய்து தொரப்பாடியில் உள்ள அரசு தாணியக்கிடங்கில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து குடியாத்தம் தாலுகா, நத்தமேடு கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் அரவிந்து(28) மீது உணவு பொருள் பாதுகாப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here