தன் கட்சியை நிலைநிறுத்த முடியாதவர்கள் அதிமுகவை மீட்க முடியுமா? தினகரனுக்கு ஜெயக்குமார் கேள்வி

0
1122

திமுக பதவி ஏற்றதில் இருந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அவரவர் வீடுகளில் முன்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது .

அதன் படி சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இந்தப் ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன,

அரசை விமர்சிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி போராட்டம் நடத்தினார்.

போராட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,’

இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இதுநாள்வரை செய்யவில்லை. பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாயும் டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று சொன்னதை நிறைவேற்றவில்லை. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை இதுநாள் வரை நிறைவேற்றவில்லை
என்று குற்றம் சாட்டினார்.

மேலும் டிடிவி தினகரன் நேற்று அதிமுகவை மீட்டெடுப்பதற்கான பணிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து செய்யும் என்று சொல்லி இருந்ததை தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், டிடிவி தினகரனும், சசிகலாவும் அதிமுகவுக்கு தொடர்பில்லாதவர்கள். தன் கட்சியை நிலைநிறுத்த முடியாதவர்கள் அதிமுகவை மீட்க முடியுமா? என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவதெல்லாம் நடக்கவே நடக்காது என்றும் கூறினார்.

மேலும்,1937ம் ஆண்டிலிருந்து சட்டப்பேரவை துவக்கம் கணக்கிடப்பட்டு தற்போது 100 ஆண்டு விழா கொண்டாட்டங்களை திமுக தொடங்கி உள்ளது.

ஆனால் சுதந்திரத்திற்கு பின்பு 1952இல் தான் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு முதல் சட்டமன்றம் கூடியது அதை கணக்கில் வைத்தே சட்டப்பேரவையின் வயதை கணக்கிட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here