பெண்ணை தாக்கிய பெற்றோர் மீது 8 பிரிவுகளில் வழக்கு

0
489

இரணியல் அருகே கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது30). ஆட்டோ டிரைவர். இவரும் காரங்காடு, கொடுப்பகுழியைச் சேர்ந்த அனிஷா(26) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது. திருமணத்திற்கு அனிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் அனிஷா கணவர் சுரேஷ்குமாருடன், வடசேரி பரமார்த்த லிங்க புரத்தில் உள்ள சுரேஷ் குமாரின் சகோதரி ஸ்ரீஜா வீட்டிற்கு வந்திருந்தனர்.

அப்போது வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேஷ்குமாரை தாக்கியதுடன் அனிஷாவை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்தபோது அனிஷா காயம் அடைந்தார்.

புகாரின் பேரில் தந்தை ராஜேந்திரன், தாயார் ஜெயபாரதி, உறவினர்கள் சிவா, நாராயணன் ஆகியோர் மீது போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவாவை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here