சிறையில் உள்ள யூடியூபர் மாரிதாஸை மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளது காவல்துறை. அவதூறு வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும், ஊடக நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கு அவரை பிணைத்திருந்தது.
இதற்கிடையே, நெல்லை மேலப்பாளையம் காவல்நிலையத்தில் 4.4.2020ல் காதர் மீரான் என்பவர் அளித்த புகாரில் 292A, 295A, 505(2), IT ACT 67 ஆகிய 4 பிரிவுகளில் இப்போது அவரை கைது செய்துள்ளது.















